(எம்.மனோசித்ரா)

கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 59 தடுப்பூசி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே போக்குவரத்து தடை நடைமுறையிலிருந்தாலும் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பில் மொவுன்ட்லவினியா, தெஹிவலை, பொரளை, கொட்டாவ, பாதுக்கை, கிரான்பாஸ், மட்டக்குளி, வெள்ளவத்தை, மாளிகாவத்தை, மருதானை, நாரஹேன்பிட்ட, ஜிந்துபிட்டி, கிருலப்பனை, மிரிஹான, தலங்கம மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று கம்பஹாவில் கட்டுநாயக்க, நிட்டம்புவ, நீர்கொழும்பு, களனி, பியகம, திவுலபிட்டி, கவத்தை, கம்பஹா, தொம்பே, மினுவாங்கொடை, மீரிகம, வத்தளை, ஜாஎல, றாகமை மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

களுத்துறையில் மத்துகம, புளத்சிங்கள, அகலவத்தை, மில்லனியாவ, இங்கிரிய, அகுருவத்தொட்ட, ஹொரனை, வத்துவ, பாணந்துரை தெற்கு, அழுத்கம, பயாகல மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிளிலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.