(லியோ நிரோஷ தர்ஷன்)

விடுதலை புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவர்களின் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில்  காணாமல் போனோர் குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள  பரிந்துரைகளை  சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. 

இலங்கை தொடர்பான  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முரணான வகையில்  இந்த  பரிந்துரைகள்  அமைந்துள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.