மட்டக்களப்பு கல்குடா  பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் மிதிவெடி ஒன்றை இன்று  (15.05.2021) மாலை மீட்டள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து மிதிவெடி ஒன்றை சம்பவதினமான இன்று இராணுவத்தினர் பொலிசார் சென்று குறித்த மிதிவெடியை மீட்டுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனார்.