முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் சுகாதார நடைமுறைகளை மீறி சிங்களவர்கள் பௌத்த விழா எடுக்கும்போது வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த முல்லைத்தீவு பொலிசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின்மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதுள்ள கொரோனாத்தொற்று அசாதாரண நிலையினைக் காரணங்காட்டி, முல்லைத்தீவு பொலிசார் முள்ளிவாய்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினூடாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தடைக்கட்டளைகளைப் பெற்றுள்ளனர்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட தடைக்கட்டளையினை 15.05.2021 இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளித்திருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.