அச்சுறுத்தல்கள் எம்மை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்.  அத்துடன்  அச்சுறுத்தல்கள் புதிய கட்சியொன்றை உருவாக்க வழியமைக்கும் என்று  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  

அனைத்து நபர்களுக்கும் அரசியல் கட்சியொன்றை உருவாக்கிக்கொள்ள உரிமையுண்டு.    அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக அரசியல் சிந்தனைகளையும் அரசியல்வாதிகளையும் அடக்கி ஒடுக்க முடியாது.  

ஒருவரை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடாது.   ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் கொள்கைகள் வித்தியாசமானவை.  இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.