நாடு ஏன் முடக்கப்படவில்லை ? - ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகிக்கும் காரணம் இது தான் !

Published By: Digital Desk 2

15 May, 2021 | 10:12 AM
image

( எம்.மனோசித்ரா )

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் நாட்டை இன்னும் முடக்காமலுள்ளதா என்ற சந்தேகம் நிலவுகிறது.

அடுத்த வாரம் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் நாட்டை முடக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 20 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்தால் , மாதத்திற்கு 600 மரணங்கள் பதிவாகக்கூடும். கொவிட் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முறையானதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாகவே இன்று 800 இற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது.

கொவிட் கட்டுப்படுத்தலுக்கான ஏதெனும் நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட்டால் அதனை நாம் வரவேற்கின்றோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எதனையும் செய்யவில்லை.

துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அபாய நிலையிலுள்ள போதிலும் கூட நாடு முடக்கப்படவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.

அவ்வாறெனில் அடுத்த வாரம் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் நாட்டை முடக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக இன்று 800 இற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 20 மரணங்கள் பதிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமானால் மாதத்திற்கு 600 பேர் கொவிட் தொற்றால் உயிரிழக்க நேரிடும். இவ்வாறு பதிவாகும் ஒவ்வொரு உயிரிழப்புக்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின்...

2025-01-18 13:48:33
news-image

அம்பாறை - மருதமுனை பகுதியில் ஐஸ்...

2025-01-18 13:44:26
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

வவுணதீவு வயல்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...

2025-01-18 13:43:59
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள்...

2025-01-18 13:43:17
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21