(இராஜதுரை ஹஷான்)

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு பொதுஜன  பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ சுவீனமடையவில்லை. 

தனிப்பட்ட காரணிகளுக்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என  இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

மினுவாங்கொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் தற்காலிக சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர்  பசில் ராஜபக்‌ஷ  தனிப்பட்ட காரணிகளுக்காகவே அமெரிக்கா சென்றுள்ளார் . 

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைகளை பெறும் அளவிற்கு அவர் சுகயீனமாக காணப்படவில்லை. 

கடந்த 11 ஆம் திகதி அவரை சந்தித்த போதும் அவர் நலமுடன் இருந்தார். அமெரிக்க பயணத்தை நிறைவு  செய்து ஒரிரு வாரங்களில் அவர் நாடு திரும்புவார் என்றார்.