பட்டம் விட்ட 5 வயது பிள்ளை உள்ளிட்ட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி | Virakesari.lk

காலி -மக்குலுவயில் 3 மாடி கட்டிடமொன்றின் கூரையில் ஏறி பட்டம் விட்ட போதே குறித்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து விழுந்து குறித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 5 வயதுடைய பிள்ளை, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.