யானை தாக்குதல்களால் அச்சத்தில் வவுனியா கிராம மக்கள்

By T Yuwaraj

14 May, 2021 | 05:10 PM
image

வவுனியாவில் யானையின் தாக்குதல் காரணமாக பயன்தரும் மரங்கள் மற்றும் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  கற்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானை மக்களின் பயன்தரு மரங்களையும், விளைபொருட்களையும் அழித்து சேதப்படுத்தி வருகின்றது.

இரவு நேரங்களில் கற்குளம் 02, கற்குளம் 03 மற்றும் கற்குளம் 04 ஆகிய கிராமங்களுக்குள் செல்லும் குறித்த யானை தொடர்ச்சியாக சேதங்களை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

கற்குளம் கிராமத்திற்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் யானை இல்லை. கிராமத்தில் சேதத்தை ஏற்படுத்தும் குறித்த யானையானது, வேறு இடத்திலிருந்து கொண்டு வந்து எமது கிராமத்தின் காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளது என கிராம மக்கள் குறிப்பிட்டனர்.

அண்மைக்காலமாக குறித்த யானையின் அட்டகாசம் கற்குளம் கிராமத்தில் அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் தங்கள் தூக்கத்தையும் இழந்து அச்சநிலையில் பரிதவித்து வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு யானைப்பிரச்சனைக்கு உடனடி தீர்வைப்பெற்று தருமாறு கற்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right