மின்னல் வேகத்தில் ஓடி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை அள்ளிய உசைன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே போய் போல பிற பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

அந்த கொண்டாட்டத்தின்போது பெண் ஒருவருடன் உசைன் போல்ட், ஆபாச நடனம் ஆடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

இதற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த  புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. பெண்ணின் கன்னத்தில் உசைன் போல்ட் முத்தமிடும் காட்சிகளும் அதிலுள்ளன.

உசைன் போல்டுடன் படுக்கையை பகிர்ந்தவர், ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த  20 வயது மாணவியான ஜேடி துர்தே என தெரியவந்துள்ளது. 

குறித்த புகைப்படங்களை, பெருமைக்காக அந்த பெண்ணே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 

இதேவேளை, உசைன் போல்டுடன் நடனமாடியதும், படுக்கையை பகிர்ந்ததும் இரு வேறு பெண்களாவர். மேலும், உசைன் போல்ட் 26 வயதுடைய கசி பென்னட் என்பவரை காதலிப்பதாக, அவரின் தங்கை அண்மையில் தெரிவித்திருந்தார்.

 எனவே காதலியைவிட மேலும் இரு பெண்களுடன் அடுத்தடுத்த நாட்களில் உசைன் போல்ட் உல்லாசமாக இருந்துள்ளமை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், உசைன் போல்டின் காதலி, கசி பென்னட்தான் தமக்கிடையில் காதல் தொடருகிறதா அல்லது முறிந்துவிட்டதா என உறுதிப்படுத்த வேண்டும்.