பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடு முழுவதும் இன்று அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மன்னார் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த  ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் அதே இடத்தை சேர்ந்த 39 வயது குடும்பஸ்தர் ஒருவர் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

நட்டாங்கண்டல் பொலிஸ் பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கு மதுபானங்களை விற்கும்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.