நலன்புரி முகாம்களில் 1033  குடும்பங்களை   விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை  

Published By: MD.Lucias

23 Aug, 2016 | 04:05 PM
image

பாதுகாப்பு அமைச்சு மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நலன்புரி நிலையங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது யாழ் மாவட்டத்தில் 936 குடும்பங்களுடன் 31 நலன்புரி நிலையங்களும் வவுனியா மாவட்டத்தின் பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் 97 குடும்பங்களும் காணப்படுகின்றன என்று   சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

வவுனியாபூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு, வவுனியா வடக்கு சின்னடம்பனில் 66 வீடுகளும் மற்றும் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் 31வீடுகளுமாக,மொத்தமாக 97 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த  வீடுகள் முறையே 2016ஆம் ஆண்டுசெப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கிடையில் நிறைவுசெய்யதிட்டமிடப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பானபுரிந்துணர்வுஒப்பந்தத்தில்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சு மற்றும் ஞானம் பவுன்டேசன் ஆகியன கையொப்பமிட்டன.  அத்துடன் ஞானம் பவுன்டேசனால்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாண வேலைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. 

எனவே,வவுனியாபூந்தோட்டம் நலன்புரிநிலையத்திலுள்ளஅனைத்துஉள்ளக இடம்பெயர்ந்தமக்களுக்கும் (97 குடும்பங்கள்) நிரந்தர வீடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி  தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் நலன்புரிநிலையத்திலுள்ள936 (குடும்பங்கள்) உள்ளக இடம்பெயர்ந்தமக்களுக்குத் தேவையானநிரந்தரவீடுகளைநிர்மாணிப்பதற்குஅமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கயாழ் மாவட்டத்தின் காங்கேசன்துறை,கீரிமலைஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் துரிதகதியில் 100வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. இக் கட்டுமானப் பணிகளை 2016ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் நிறைவுசெய்வதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்உரிமையாளர்களின் முன்னெடுப்பின்கீழ்  )பலாலிவடக்கில் 104 வீட்டுஅலகுகள் நிர்மாணிக்கப்பட்டுவருவதோடு இப் பணிகள் 2016ஆம் ஆண்டுஒக்டோபர் மாதமளவில் நிறைவுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நலன்புரிநிலையங்களிலுள்ள 250 காணியற்றகுடும்பங்களினைமீள்குடியேற்றுவதற்குகாங்கேசன்துறை  சீமெந்துதொழிற்சாலைப் பகுதியில் 250 காணித்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. 

அத்துடன்  உள்ளக இடம்பெயர்ந்த மக்களை நலன்புரி முகாம்களிலிருந்து முழுமையாக வெளியேற்றி நிரந்தர தீர்வினை வழங்குவதற்காக மேலும் 452 குடும்பங்கள் நலன்புரிமுகாம்களிலிருந்துமீள்குடியமர்த்தப்படவேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர்  அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி  குறிப்பிட்டார். 

ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவின் அறிவுறுத்தலுக்கிணங்க,நலன்புரிமுகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் வசிக்கும் குடும்பங்களைமீள்குடியேற்றுவதற்கானநடவடிக்கைகள் பாதுகாப்புஅமைச்சினால் முன்கூட்டியேமேற்கொள்ளப்பட்டுள்ளன.நலன்புரிநிலையங்களிலுள்ளமேலும் 100 குடும்பங்களைகுறைப்பதற்கும்மீள்குடியேற்றுவதற்கும் காங்கேசன்துறைதெற்கு,மேற்குமற்றும் மையப்பகுதி,பலாலிவீமன்காமம் வடக்குமற்றும் தையிட்டிஆகிய இடங்களிலுள்ள 450 ஏக்கர் காணிகளைவிடுவிப்பதற்குகலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உள்ளக இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றத்திற்குஏதுவாகஅரசஅதிகாரத்திலுள்ளதனியார் காணிகளைவிடுவிப்பதற்குஅரசாங்கத்தினால் அதிகமுன்னுரிமைவழங்கப்பட்டுவருகின்றது. இவ் விடயம் தொடர்பாக,உள்ளக இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றத்திற்கெனதனியார் காணிகளைவிடுவிப்பதுதொடர்பாகபிரதேசசெயலகங்களுடன் இணைந்துசெயற்படுவதற்குபாதுகாப்புஅமைச்சின் செயலாளர்பொறியாளர். கருணாசேனஹெட்டியாராய்ச்சியின்  தலைமையில் விசேட குழு ஒன்றுசெயற்பட்டுவருகின்றது. 

போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தகுடும்பங்களின் தேசியகொள்கைகளுக்கானநிரந்தரதீர்விற்குகடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைஅமைச்சர்களால்அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும்,உரிமையாளர் முன்னெடுப்புடன் கூடிய 10,000 வீடுகளின் திட்டமானதுவடக்குமற்றும் கிழக்குமாகாணங்களில் மிகவும் முன்னேற்றகரமாகசெயற்படுத்தப்பட்டுவருகின்றது. 2,400பகுதியளவுபாதிக்கப்பட்டவீடுகள் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன மற்றும் குடிநீர் வசதிகள் சர்வதேச வீதிகள் மற்றும் மின்சாரத்துடன் கூடியஉட்கட்டமைப்புவசதிகளுடன் 7,600 சுகாதாரஅலகுகள்  உள்ளக இடம்பெயர்ந்தகுடும்பங்களுக்கெனநிர்மாணிக்கப்பட்டுவருகின்றன.

அதிகபட்சமாகஒருகுடும்பத்திற்கு ரூபா. 100,000.00 என்றவகையில் 12,050 குடும்பங்கள் வாழ்வாதாரஅபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன . மேலும் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக: உள்ளக இடம்பெயர்ந்தமக்கள்,நாடுதிரும்பப்பட்டஅகதிகள்,பெண்களைதலைமைத்துவமாகக் கொண்டகுடும்பங்கள்மற்றும் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டமுன்னாள் போராளிகள்ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவ் அனைத்துமுயற்சிகளும்இலங்கையில்நிலையானஓர் நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்கானநோக்கத்தைக் கொண்டவையாகும்என அமைச்சின் செயலாளர். வே. சிவஞானசோதிஅவர்கள் மேலும் கூறினார்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47