இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மே 13, 14 ஆம் திகதிகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டிற்கு குடிபெயர முயன்றமைக்காக 30 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 30 ஆண்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.