இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா காலம் குறித்து அறிவிப்பு

Published By: Digital Desk 2

14 May, 2021 | 03:37 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களது அனைத்து வகையான கடவுச் சீட்டுகளுக்குமான வீசா அனுமதிக்காலமானது 2021 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரையான  60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு, குறித்த காலப்பகுதிக்கு அமைவாக வீசா கட்டணம் மாத்திரம் அறவிடப்படுவதுடன், தண்டப்பணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.

அவசர மற்றும் அத்தியசிய தேவைகளுக்காக வெளிநாட்டு பயணச் சீட்டு வழங்குவதற்காக பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகம் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயண கட்டுப்பாட்டுகளுக்கு அமைவாக கண்டி, வவுனியா, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு திறந்திருக்கும் எனவும் அத்தியவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் வருகைதரும்படியும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுற்றுலா வீசா வைத்திருப்பவர்கள் தங்களது வீசாவை நீட்டித்துக்கொள்வதற்கான வீசா கட்டணத்தை செலுத்துவது மற்றும் அத்தாட்சிப்படுத்துவதற்கு கீழ் காணும் நடைமுறையை பின்பற்றும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. .

இதன்படி, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான குடியுரிமை வீசா வைத்திருக்கும் சகலருக்கும் எதிர்வரும்  ஜூலை மாதம் 9 ஆம் திகதிக்கு முன்பாக அலுவலக நாட்களின் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 0707101050 எனும் தொலைப்பேசி  இலக்கத்துக்குதொடர்பை ஏற்படுத்தி, அதன் ஊடாக தமக்கான காலத்தையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு, வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அத்தியவசிய சேவைகளுக்காக அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01