நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

கொழும்பு நகருக்குள் உட்பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் சோதனை சாவடிகளை போட்டு பொலிஸாரால் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதேவேளை, தலைநகர் கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையம் உள்ளிட்ட பகுதிகள் சன நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.

(படப்பிடிப்பு : தினெத் சமல்க)