இந்தோனேஷியாவில் இன்று (14.05.2021) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவம் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சினங்பேக் பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் இன்று வெள்ளிக்கழமை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.