கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக கம்பஹா மாவட்டத்திலுள்ள கஹட்டோவிட்ட, பஸ்யாலை மற்றும் திஹாரியை அண்டியுள்ள உடுகொட உள்ளிட்ட பல கிராமங்களின் தாழ் நில பகுதிகள் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேசங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புனித நோன்புப் பெருநாள் தினமான இன்று மேற்படி பிரதேச மக்கள் எதிர்பாராத நிலையில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளமையினால் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.