போலி செய்திகளை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ஜப்பானிய பத்திரிகையாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரியில் மியன்மாரில் இராணுவம் ஆட்சியைப் கைப்பற்றியதிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் யூகி கிடாசுமி ஆவார்.

மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோனில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி 45 வயதான யூகி கிடாசுமி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மியான்மர் அதிகாரிகள் அவர் சட்டத்தை மீறியதாகக் கருதுகின்றனர், எனினும் ஜப்பானின் கோரிக்கைக்கு அமைவாக அவர் தற்சமயம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் கிட்டத்தட்ட 800 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.