வெற்றிக்காக தைரியமாக விளையாட வேண்டும் - குசல் பெரேரா

Published By: Vishnu

14 May, 2021 | 11:46 AM
image

இலங்கை அணி தனது நீண்டகால வெற்றிப் பாணியை இழந்துவிட்டதாகவும், அதை மீட்டெடுக்க அணி 'தைரியமாக' விளையாட வேண்டியது அவசியம் என்றும் குசல் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணியின் ஒருநாள் தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் குசல் இளம் வீரர்களைக் கொண்ட அணியைப் பெற்றுள்ளார். அந்த அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸின் ஆதரவையும் குசால் இழந்துள்ளார்.

திமுத் கருணாரத்னவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குசல் பெரேரா இதன்போது மேலும் கூறுகையில்,

விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளில் 100 சதவீதம் கொடுக்க வேண்டும். நாங்கள் போட்டிகளில் வெற்றி பெற விரும்பினால் நாங்கள் 'துணிச்சலான' கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனெனில் தோல்வி பயத்தால் விளையாடினால் ஒரு போட்டியிலும் வெற்றிபெற முடியாது.  நாம் தைரியமாக விளையாடினால் சில நேரங்களில் நிறைய விடயங்களை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறினார்.

மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை அணி எதிர்வரும் 16 ஆம் திகதி பங்களாதேஷுக்கு புறப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06