தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தென்னிந்திய நடிகர் அஜித் குமார் 25 இலட்சம் இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டி வருகிறார். 

அதில் ஏற்கெனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ஒரு கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக அளித்திருந்த நிலையில் திரைத்துறையினர் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு 25 இலட்சம் இந்திய ரூபாவை அனுப்பியிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.

இதை உறுதிப்படுத்த அவரது விளம்பரதாரர் சுரேஷ் சந்திரா சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,