கேகாலை மாவட்டத்தில் வறக்காப்பொல - கஸ்நாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்துடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.