சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகளின் தொகை சுங்கப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட சுங்க பரிசோதனையின் போது இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையை நடத்திய அதிகாரிகள் கொள்கலன்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், ‘சிலோன் பிளாக் டீ’ என்ற பெயரில் நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு  மீள் ஏற்றுமதி செய்யத் தயாரனபோது மீட்கப்பட்டுள்ளது.