இந்தியாவில் வடக்கிழக்கு மாநிலமான அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள்  உயிரிழந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

அடர்ந்த காட்டுப்பகுதியான கத்தியடோலி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

புதன்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் யானைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஏராளமான யானைகள் உயிரிழப்பு குறித்து தான் கவலைப்படுவதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் 27,000 க்கும் மேற்பட்ட ஆசியாவைச் சேர்ந்த யானைகள் உள்ளன, அவற்றில் 21 வீதமானவை அசாம்  மாநிலத்தில் உள்ளன.

அசாமில் 20 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் பல யானைகள் உயிரிழந்து கிடப்பது  இதுவே முதல் தடவையாககும்.

நாகான் மாவட்டத்தில் கத்தியடோலி மலைத்தொடரில் பாரிய இடியினால் யானைகள் உயிரிழந்துள்ளதால் மிகுந்த வேதனையடைந்துள்ளேன் என மாநில வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.