நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி கனியன், நோட்டன்பிரிட்ஜ், உடவலவ மற்றும் குகுலே கங்கை ஆகய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நீர்த் தேக்கங்களை அண்மித்த மற்றும் தாழ்வான நிலப் பகுதியில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.