அவுஸ்திலேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியில் சகலதுறை வீரரான 26 வயதுடைய ஏஞ்சலோ பெரேரா இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

உபாதைக்குள்ளான அணி வீரர் நுவான் பிரதீப்புக்கு பதிலாகவே ஏஞ்சலோ பெரேரா அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். மேலும் முதல் போட்டியில் காயமடைந்து தினேஸ் சந்திமால் நாளை போட்டியில் களமிறங்குவார் எனவும் தெரிவித்தார்.