நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து 3 மாவட்டங்களில் உள்ள 42 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 42 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.