யாழில் தடைகளை மீறி இரகசிய திருமணம் -  திருமணத்தில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா!

Published By: Digital Desk 4

14 May, 2021 | 06:18 AM
image

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Wedding – Vivek and Renu

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பிரதேசத்தில் இரகசியமாக முறையில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. 

இது தொடர்பில் பின்னர் தகவல் அறிந்த சுகாதார பிரிவினர் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட சிலரை இனம் கண்டு தனிமைப்படுத்தி இருந்தனர். 

அவர்களில் சிலருக்கு முன்னெடுக்கப்பட்ட பி,சி.ஆர் பரிசோதனை முடிவில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதேவேளை கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட நெல்லியடி பிரதேசத்தில் உள்ள பிரபல வெதுப்பாக ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்து குருநகர் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் குழந்தை ஒன்றுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது தவிர யாழ்ப்பாண மாநகர சுகாதர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதேவேளை  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் , பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் , சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07