உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Realme, இவ்வருடம் மே மாதம் நடுப்பகுதியில் Realme இலக்கத் தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

உலகெங்கிலும் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் தொடர்களில் ஒன்றான Realme இலக்கத் தொடர் (Realme number series) உள்ளூர் இளைஞர்களுக்கு ஏற்ற வகையிலான, மலிவு விலையில் பிரீமியம் அம்சங்களுடன், முதன்மையான தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி வழங்க வழி வகுக்கிறது. இக்கையடக்கத் தொலைபேசியானது,

தற்போதுள்ள நடுத்தர வகை கையடக்க தொலைபேசிகளிலிருந்து தன்னை முன்னிறுத்தும் வகையிலான, கெமராவுடன் வெளிவரவுள்ளதால், அது ஒரு முக்கிய தடம் பதிக்கும் என ஊகிக்கப்படுகிறது. காரணம் இது அதன் தொலைபேசி வரிசைகளில் உள்ள ஒரு முன்னேற்றகரமான அம்சம் என விபரிக்கப்படுகிறது.

அந்த வகையில், AI வலுவுடனான குவாட் கெமரா மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளைஞர்கள் தற்போது எதிர்பார்க்கும், வழிகாட்டல் கோடுகள் புகைப்பட அம்சம் உள்ளிட்ட பல்வேறு உயர்ந்த அம்சங்களை இச்சாதனம் தன்னுள் பிரதிபலிக்கப் போகின்றது. இக்கையடக்கத் தொலைபேசியானது, டிஜிட்டல் உலகத்தால் ஈர்க்கப்படும் எதிர்காலத்திற்கான வடிவமைப்பைக் கொண்டு வருவதோடு, மெய்யான மற்றும் மாயமான டிஜிட்டல் உலக அம்சங்களை ஏற்றாற் போல் ஒருங்கிணைத்து, அற்புதமான காட்சிப் பாணியில் உண்மையான மற்றும் மாயையான பிரதிபலிப்பை உருவாக்குகிறது.

Realme இனது இலங்கைக்கான தரக்குறியீட்டு முகாமையாளர், ரணுர கடுவெல இது தொடர்பில் தெரிவிக்கையில், “Realme ஆனது, புத்தம் புதிய, இளைஞர்களை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தரக்குறியீடாகும், அதன் ஆரம்ப மூன்று ஆண்டுகளிலேயே அது உலக சந்தையில் நுழைந்துள்ளது. இந்த சமீபத்திய நடுத்தர வகை ஸ்மார்ட்போன், உயர்ந்த அம்சங்களை கொண்டிருந்தபோதிலும் அனைவராலும் அடையக் கூடிய வகையிலான விலையில் மிக மலிவான ஒன்றாக அமையவுள்ளது.” என்றார்.

Realme பற்றி: 

Realme என்பது ஒரு தொழில்நுட்ப தரக்குறியீடாகும். இது முன்னணி தரம் மற்றும் காலத்திற்கு ஏற்ற நவீனத்துவமான ஸ்மார்ட்போன்களாகும் என்பதுடன் அது AIoT தயாரிப்புகளை உலக சந்தைக்கு வழங்குகிறது. Realme பயனர்கள், இளமை மற்றும் உலக அளவிலான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். Realme தயாரிப்புகள் யாவும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி இளைஞர்களை ‘துள்ளுவதற்கு துணிய’ வழி வகுக்கின்றன. 

Realme உலகின் 7ஆவது சிறந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக விளங்குவதோடு, 2020 இன் 3ஆவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் Counterpoint புள்ளி விபரங்களின்படி பிரதான ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், Realme இனது உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 25 மில்லியனை எட்டியதன் மூலம், அது வருடத்திற்கு வருட (YoY) வளர்ச்சி 808% விகிதத்தை அடைந்ததன் மூலம், 2019 இலிருந்து 2020 இரண்டாம் காலாண்டு வரை தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் Realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.