அக்ஷய திருதியையின் மகத்துவங்கள்

13 May, 2021 | 09:09 PM
image

அக்ஷய என்றால் அள்ள அள்ள குறையாதது என்று பொருள். அக்ஷய பாத்திரம் என்பதற்கு "அமுத சுரபி"எனும் மற்றொரு திருநாமமும் உண்டு. இந் நந்நாளில் தங்க நகைகள் வாங்கினால் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.

தங்கத்துடன், மஞ்சள், குங்குமம், உப்பு, வெள்ளி நகைகள், போன்ற மங்கலம் நிறைந்த பொருட்களையும் வாங்குவது சிறப்பானதாகும். வசதி படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பெருங்கொடையாகும். இத்தினத்தில் கால் நடைகளுக்கு ஆகாரமிடல் மா தர்மமாகும்.

ஒரு முறை பூமியில் நீர் வரட்சி கடுமையாக இருந்த போது பகீரதன் என்னும் அரசன் சிவனை நோக்கி கடும் தவம் இயற்றினான். பகீரதனின் கடுந்தவத்துக்கு செவி சாய்த்த ஈசன் தன் சிரசிலிருந்த கங்கையை பூவுலகுக்கு அனுப்பி புவியை செழிப்படையச் செய்த புனித நாளும் இவ்வக்ஷய தினமே.இச்சம்பவத்திற்கு பின் உருவான சொல்தான் "பகீரதப்பிரயத்தனம்"என்பது. 

வனவாசத்தின் போது மிகுந்த துன்பங்களை அடைந்த பாண்டவர்களுக்கு சூர்ய பகவான் அக்ஷய பாத்திரம் வழங்கிய தினமும் இந்நாளே. கோவலனுக்கும்,மாதவிக்கும் பிறந்த மணிமேகலைக்கு மணிபல்லவ நாட்டில் இறைவனால் அளிக்கப்பட்ட "அமுத சுரபி"எனும் அக்ஷய பாத்திரம் கிடைத்ததுவும் இந்நாளிலேயாகும்.

ஐஷ்வர்யலடசுமி,தான்யலட்சுமி தோன்றியதும் இச் சுபதினத்திலே. 

ஸ்ரீ மகாலட்சுமி திருமாலின் திருமார்பில் குடிகொண்டு அருளாசி வழங்கியதும் ஓர் அக்ஷய திருதியை சிறப்பு நாளிலேயாகும். திருப்பாற்கடலை கடைந்த போது தேவாமிர்தம்,லட்சுமி,வலம்புரிசங்கு, ஐராவதம், கற்பகத்தரு போன்ற சிறப்புகள் நிறைந்தவைகள்  கிடைத்த தெய்வீக தினமும் அக்ஷய திருதியையே. அப்போது திருமால் லட்சுமியையும்,வலம்புரிசங்கையும் தான் எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீ மகாலட்சுமியிடம் குபேரன் "நிதிக்கலசம்" பெற்றதும் இத்தினத்திலே.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஆறாவது அவதாரமான ஸ்ரீ பரசுராமர் அவதரித்ததும் இப்புனித நந்நாளில்.

ஸ்ரீ விநாயகருக்கு வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை போதித்த நந்நாளும், ஸ்ரீ விநாயகர் ஒற்றைத் தந்தத்தால் அதை எழுத ஆரம்பித்ததும் ஓர் அக்ஷய திருதியை சிறப்பு தினத்திலேயாகும். அண்ணபூரணி அவதரித்ததும்,நான்முகனாகிய பிரம்மதேவன் இப்பூவுலகை தோற்றுவித்ததும் ஒரு அக்ஷய தினத்திலே.

மதுரை ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ சுந்தரேஷ்வரரை அடைந்த தெய்வீக சுபநாளும் இந்நாளிலே. தெய்வாம்சம் கூடிய இந்நற் தினத்தில் உலகைப் பீடித்து ஆட்கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா ஒழிந்து,மீண்டும் இவ்வுலகு வழமை போல் செழிப்புடன் இயங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திப்போமாக ...! 

ஆக்கம் : எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவச பொது சுகாதாரத்துறை கட்டமைப்பில் பாரிய...

2023-12-08 14:51:18
news-image

ஆபத்தை தடுப்பதற்கு திட்டங்கள் அவசியம் 

2023-12-07 22:56:27
news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03