வவுனியாவில் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி மாதுபானசாலைகள் திறந்திருந்த நிலையில் பொலிசார் சென்று அனைத்து மதுபானசாலைகளையும் இன்று (13.05) மாலை பூட்டினர்.
இன்று இரவு முதல் எதிர்வரும் மூன்று தினங்கள் நாடுமுழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் இன்று (13.05) மாலை மதுபானசாலைகளுக்கு முன்னால் அதிகளவிலான குடிமக்கள் கூடியிருந்தனர்.
இதனால் மதுபானசாலைகளுககு முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மதுபானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இதனையடுத்து, மதுபானசாலைகளுக்குள் களம் இறங்கிய வவுனியா பொலிசார் உடனடியாக மதுபானசாலைகளை மூடுமாறு பணித்ததுடன், மதுபானசாலை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இதேவேளை, மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளையும் மீறியே அதிகளவிலான கூட்டம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM