தமிழ் திரை உலகின் வில்லன் நடிகரும், குணச்சித்திர நடிகருமான டேனியல் பாலாஜி கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'சித்தி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமான நடிகர் டேனியல் பாலாஜி, 'ஏப்ரல் மாதத்தில்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராகவும் அறிமுகமானார்.

மறைந்த நடிகர் முரளியின் உறவினரான இவர், தொடர்ந்து 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'பொல்லாதவன்', 'என்னை அறிந்தால்', 'அச்சம் என்பது மடமையடா', 'பைரவா', 'வடசென்னை', 'பிகில்' என பல படங்களில் நடித்து வில்லன் நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களிடம் பிரபலமானவர். 

தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் குணமடையவேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.