நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பயணக்கட்டுபாடுகளிலும், பதிவுத் திருமணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட  எண்ணிக்கையில் (15 பேர்) பதிவுத் திருமணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

எனினும் திருமண விருந்துபசாரங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுக்க அனுமதி இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.