இந்தியாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். 

அவர், தனது 80 வயதில், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உடல்நலக்குறைவால் காலமானார். 

சீமானின் தந்தை மறைவு குறித்த செய்தியை நாம் தமிழர் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 அதில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள்  மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!’ என கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும், சீமானின் தந்தை மறைவிற்கு, அரசியல், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தமது இரங்களை வெளியிட்டு வருகின்றனர்.