கைதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் இரத்து 

Published By: Digital Desk 4

13 May, 2021 | 05:09 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் , நன்நடத்தைகளைக் கருத்திற்கொண்டு , அவர்கள் குடும்பத்தினருடன் சில தினங்கள் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்டுவரும் வரப்பிரசாதங்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறையில் திடீர் சோதனை - பல மர்ம பொருட்கள் மீட்பு |  Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்நடத்தைகளைக் கருத்திற் கொண்டு , அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில தினங்கள் வாழ்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விசேட வாய்ப்பு வழங்கப்படும்.

நீண்டகாலமாக சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகள் , தங்களது தண்டனை காலத்தில் இருவருடகாலத்தை பூர்த்தி செய்ததும், அவர்களது நற்செயல்களை கருத்திற் கொண்டு ஆரம்பக்கட்டமாக ஒரு வாரம் அவர்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்க வாய்ப்பளிக்கப்படும். பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 10-14 தினங்கள் வரை குடும்பத்தினருடன் தங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

கைதிகளின் நன்நடத்தை தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்பட்டு , அது தொடர்பில் விடய பொறுப்பு அமைச்சரிடம் அறிவித்து , அவருடைய அனுமதியுடனே இந்த வரப்பிரசாதம் வழங்கப்படும். 

எனினும் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அதனை செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53