கொரோனா தடுப்பூசியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பை நிறைவு செய்து நேற்று புதன்கிழமை சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார். கொரோனா வைரஸிற்கு எதிரான இந்த போரை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர் கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றது.