கொரோனா தொற்று பரவலை தடுக்க கொட்டகலையில் பொலிஸார் விசேட நடவடிக்கை

Published By: Vishnu

13 May, 2021 | 12:49 PM
image

கடந்த சில தினங்களாக மலையகத்தின் பிரதான நகரங்களை அண்டிய பகுதியில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டதன் காரணமாக பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திம்புள்ள, பத்தனை பொலிஸார் கொட்டகலை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக கடைகளில் கொரோனா இன்னும் ஒழியவில்லை முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் சமூக இடைவெளி பேண வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்கள் கடையாக சென்று தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

இதன்போது கடையில் முறையாக முகக்கவசம் அணியாது இருந்தவர்கள், சமூக இடைவெளி பேணாது இருந்தவர்கள், கடையில் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக தொற்று நீக்கி மற்றும் பதிவேடுகள் பேணப்படாத கடைகள் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

எதிர்வரும் நாட்களில் சுகாதார பொறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இதுதான் இறுதி அறிவித்தல் எனவும் பொலிஸார் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்..

இதேவேளை வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாது பயணித்தவர்களையும் கடுமையாக எச்சரித்து இறக்கிவிடப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51