சர்வதேச ஒலிம்பிக் குழு ஜப்பானில் பரவலான மக்கள் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. 

ஜப்பானிய அரசாங்கத்தால் கொவிட் -19 ஐ எதிர்கொள்ள முடியும் என்றும், விளையாட்டு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு நம்பிக்கை கொண்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எனினும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலப் பகுதி உள்ள நிலையில் ஜப்பான் கொவிட் -19 தொற்றுநோய்களின் எழுச்சியை எதிர்த்துப் போராடுகிறது. 

ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அதன் பெரும்பான்மையான மக்கள் ஒலிம்பிக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது இரண்டாவது முறையாக ஒத்திவைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய டென்னிஸ் நட்சத்திரங்களான கீ நிஷிகோரி மற்றும் நவோமி ஒசாகா ஆகியோரும் ஒலிம்பிக்கை நடத்துவது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.