முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில்  ஒரே நாளில் கொரோனாவால்  3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும்,  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 பேராக உயர்ந்துள்ளதுடன், கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,52,181 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

அத்தோடு, கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,120 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவையெனவும் கூறப்படுகின்றது.