இலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா, வந்துரம்ப, இமதுவ, வலஸ்முல்ல, மத்துகம, மெல்சிறிபுர, குருநாகல், அலவ்வ (2), மொரொன்துடுவ, ஓமல்பே, எம்பிலிபிட்டி, ஹல்தடுவத்த, கந்தெகெதர, பசறை, கொழும்பு – 05, தல்கஸ்வல மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று 2,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132,527 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 24,020 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று 957 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள். நாட்டில் இதுவைரை மொத்தமாக 107,657 பேர் குணமடைந்துள்ளார்கள்.

அத்துடன் 1519 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.