சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலாவதியாகும் வாகன வருமான உத்தரவு பத்திரங்களை புதுப்பிக்கும் உரிமையாளர்களுக்கு ஜூன் 15 அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.