உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசியை  ஜெனிவாவிலுள்ள ஹெப்பிடாக்ஸ் யுனிவர்சிட்டேர்ஸ் டி வைத்தயசாலையில் இன்று போட்டுக்கொண்டேன்.

தடுப்பூசிகள் உயிர்களை காப்பாற்றுகின்றன. எல்லா நாடுகளும் அவற்றை விரைவில் பெறுவது மிகவும் முக்கியமானது. என்னைப் போலவே நீங்கள் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடிய ஒரு நாட்டில் வசிக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து  தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள்.

தேவையான அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க, அரசாங்கங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள்  அதிக அளவு  பகிர்ந்து கொள்ள உறுதியளிக்க வேண்டும் மற்றும் அனைவரையும் பாதுகாக்க  கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பதிவின் கீழ் டெட்ரோஸ் அதனோம் எந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார் என பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.