முள்ளிவாய்க்கால் நினைவு  தூபி அமைந்துள்ள நினைவு முற்றத்தின் நான்கு பகுதிகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டு அப்பகுதிக்குள் நுழைய இராணுவத்தால் தடை விதிக்கபட்டுள்ளது .

பிரதான வீதியிலிருந்து நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு உள்ளே எவரும் செல்லமுடியாது தடை ஏற்படுத்த பட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு செல்வோர் வேறு பாதைகளால் செல்லுமாறு இராணுவத்தால் பணிக்கபடுகின்றார்கள்.

நேற்று மாலை நினைவேந்தல் பொது கட்டமைப்பினரால் பொது நினைவுக்கல் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு உடனடியாக இராணுவம் ,பொலிஸார் வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து இராணுவம் அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். 

அப்பகுதிக்குள் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இராணுவத்தால் மறுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.