நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 12 கிராம சேவகர் பிரவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி காலி, இரத்தினபுரி மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகளுக்கு புதிதாக தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பகிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பளுகஹவெல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் அகங்கம பொலிஸ் பிரிவின் கரதுன்கொட கிராம சேவகர் பிரிவு, கொவியபன்ன கிராம சேவகர் பிரிவு, கஹவன்னகம கிராம சேவகர் பிரிவு, தொம்மன்கொட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் காலி மாவட்டத்தின் ஹபராதுவ பொலிஸ் பிரிவின் லனுமோதர கிராம சேவகர் பிரிவு, பொனவிஸ்ட கிராம சேவகர் பிரிவு, கட்டுக்குருந்த கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் பல்மதுள்ள பொலிஸ் பிரிவின் தெனவக்க பாதகட கிராம சேவகர் பிரிவு, திபிட்டிகல கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பொலிஸ் பிரிவின் குருவிட்ட கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ கிராம சேவகர் பிரிவின் நகரப் பகுதி ஆகியன தனிமைப்படுத்தப்பட்டள்ளன.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவின் உக்கல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் தெஹியத்தகண்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்டத்தின் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவின் கொனகல பகுதி மற்றும் போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவின் 30 ஏக்கர் பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டள்ளன.