வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.  

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மாணவர்களிடம் இன்று (12) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையில் 31 மாணவர்களுக்கு மேலும் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.