கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தமக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர், தம்மை சுயதனிமைப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.