அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் அல்லது கடவு சீட்டின் இறுதி இலக்கத்துக்கமைய வீடுகளில் இருந்து ஒருவருக்கு மாத்திரம் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, நாளை (13.05.2021) இரவு 11 மணிமுதல் 31 ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியில் செல்ல ஒருவருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் தேசிய அடையாள அட்டையின் குறித்த இறுதி இலத்தை கொண்டுள்ளவர்கள் மட்டும் உரிய நாளில் அனுமதிக்கப்படுவர்.
அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும்.
இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வௌியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
திகதி இரட்டை இலக்கத்தில் இருந்தால் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 0,2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வௌியேற முடியும்.
அதேநேரம் திகதி ஒன்றையிலக்கத்தில் இருந்தால் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள்1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும்.
´உதாரணமாக இன்று மே மாதம் 12 ஆம் திகதி. இன்றைய தினத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 0,2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வௌியேற முடியும். நாளை வியாழக்கிழமை அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள்1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும். 0 இருக்கும் போது அது இரட்டை எண்ணாக கருதப்படும். அதன்படி, இரட்டை எண்ணுக்கு உரிய தினத்தில் பயணிக்க முடியும்´ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM