கொவிட் வைரஸ் தாக்கத்தில் ஜம்மு - காஷ்மீர்...: சிறப்பு திட்டங்களை அறிவித்தார் ஆளுநர்

Published By: Digital Desk 8

12 May, 2021 | 02:30 PM
image

கொவிட் - 19 வைரஸ் தொற்றால் உறவுகளை இழந்த மற்றும் தின உழைப்புகளில் வாழும் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு உதவுதல் மற்றும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் குறித்து ஆளுநர் மனோஜ் சின்ஹா மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளதுடன் மக்கள் நல திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் சிரேஷ்ட பிரஜைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அவரது ஒய்வூதியத்தை வாழ் நாள் முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தியோகப்பூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே போன்று கொடிய வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு புலமைபரிசில் திட்டங்கள் வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வாழ்வாதாரத்தை  இழந்துள்ள குடும்பங்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் சுய தொழில் முயற்சிகளை ஈடுப்படவும் தேவையான நிதி உதவி திட்டங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த இரு மாதங்களுக்கு தலா 1000 ரூபா வீதம் தினசரி தொழிலை நம்பி வாழ்ந்தவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்விதமான தடைகளுமின்றி அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஜம்ம - காஷ்மீர் பகுதிகளில் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டங்கள் மற்றும் ஏனைய சமூக நல திட்ட கொடுப்பணவுகளையும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி இந்த நெருக்கடியான நிலையில் வயோதிப இல்லங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் கூடிய உதவி ஒத்துழைப்புகளை வழங்குகின்ற நிலையில் மக்கள் கொவிட் 19 வைரஸ் தடுப்பு சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட வேண்டிய நிலையே தற்போதுள்ளது. எனவே அதற்கு முதலிடம் கொடுத்து செயற்பட வேண்டும்.

ஜம்மு- காஷ்மீரில் 49,951கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளர். புதிய தொற்றாளர்களாக  703 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் தரையிறங்கிய “மினாப் 168” விமானம்...

2026-04-11 13:30:10
news-image

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று...

2026-04-11 13:19:55
news-image

பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தை...

2026-04-11 12:14:50
news-image

இலங்கை துணைத் தூதுவரின் பங்கேற்பு: புதுச்சேரியில்...

2026-04-11 12:34:13
news-image

“பழிவாங்குவோம் ; இது போரின் முடிவல்ல...

2026-04-11 11:24:40
news-image

“பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” -...

2026-04-11 11:29:02
news-image

ஆர்டெமிஸ்-2 மிஷன் வெற்றி: நிலவுப் பயணத்தை...

2026-04-11 09:51:14
news-image

லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை...

2026-04-11 02:04:50
news-image

நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ;...

2026-04-10 17:51:51
news-image

“யூத அரசை புற்றுநோய் எனக் கூறுவது,...

2026-04-10 15:44:11
news-image

ஈரானுக்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அவசர...

2026-04-10 16:28:21
news-image

இஸ்ரேல் "மனிதகுலத்தின் சாபம் ; பாலஸ்தீன...

2026-04-10 15:05:12