ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் கடைசி நாளன்று சம்­போ­ரோ

மோ பிர­தே­சத்தில் நடை­பெற்ற

மரதன் ஓட்டப் போட்­டியில் கென்­யாவின் எலியுட் கிப்­சோகே தங்கப் பதக்­கத்தை வென்றார். இவர் 2 மணித்­தி­யா­லங்கள் 8 நிமி­டங்கள் 44 செக்­கன்­களில் போட்­டியை நிறைவு செய்தார்.

இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு மரதன் ஓட்டப் போட்­டி­க­ளிலும் கென்யா தங்கப் பதக்­கங்­களை சுவீ­க­ரித்­துக்­கொண்­டது.

கடந்த 14ஆம் திகதி நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான மரதன் ஓட்டப் போட்­டியில் கென்­யாவின் ஜெமிமா ஜெலகாட் சும்கொங் வெற்­றி­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் இலங்­கையின் தேசிய கொடியை ஏந்திச் செல்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­ட­வரும் மரதன் ஓட்ட வீர­ரு­மான அநு­ராத இந்தி­ரஜித் குரே, மரதன் ஓட்டப் போட்­டியில் பிர­கா­சிக்கத் தவறி 34ஆவது இடத்தைப் பெற்றார்.

இவர் மரதன் ஓட்­டத்தை 2 மணித்­தி­யா­ல­ங்கள் 17 நிமி­டங்கள் 6 செக்­கன்­களில் நிறைவு செய்தார்.

155 வீரர்கள் பங்­கு­பற்­றிய இப் போட்­டியில் 140 பேர் முழுத் தூரத்­தையும் ஓடி முடித்­தனர்.

இப் போட்­டியில் 34ஆவது இடத்தைப் பெற்­ற­போ­திலும் தான் திருப்தி அடை­வ­தாக அநு­ராத இந்தி­ரஜித் குரே தெரி­வித்தார்.

ஒலிம்­பிக்­கி­லி­ருந்து ஓய்வு பெறும் நோக்கம் இருக்­கின்­றதா என அவ­ரிடம் கேட்­ட­போது, இது­வரை அப்­படி ஒரு எண்ணம் இல்லை. மரதன் ஓட்­டத்­திற்கு வயது ஒரு பொருட்­டல்ல. எனவே நான் தொடர்ந்து மரதன் ஓட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­றுவேன் என்றார்.