தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் கண்ணாடி போன்ற கூர்மையான பற்களும், கால்பந்து வடிவிலான உடலும் கொண்ட ஒரு அசாதாரண மீனொன்று உயிரிழந்த நிலையில் கடந்த வாரம் கரையொதுங்கியுள்ளது.

கறுப்பு நிறத்திலான ஆங்லர் என்ற இந்த மீன் பொதுவாக 2,000 க்கும் மேற்பட்ட அடி ஆழத்தில் வாழ்வதாக கூறப்படுகிறது.

ஒரு உண்மையான ஆங்லர் மீனை இவ்வாறு பார்ப்பது மிகவும் அரிதான செயல் என்றும், மீன் உயிரிழந்த நிலையில் எவ்வாறு கரையொதுங்கியது என்பதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

இந்த மீன் பொதுவாக கடலின் இருண்ட ஆழத்தில் காணப்படுகிறது. உயிரினத்தின் பற்கள் கூர்மையான கண்ணாடித் துண்டுகள் போன்றவை மற்றும் அவற்றின் "பெரிய வாய் உறிஞ்சுவதற்கும், இரையை தங்கள் உடலின் அளவை விழுங்குவதற்கும் வல்லது."

உயிரினத்தின் அளவு மற்றும் தலையின் மேற்புறத்தில் நீண்டு நிற்கும் தண்டு காரணமாக, கலிபோர்னியா மாநில பூங்காக்கள் இது ஒரு பெண் இனம் என்று கூறியது.

மீனின் தலையில் உள்ள தண்டு இரையை ஈர்க்க பயன்படுகிறது.