2021 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய நியூஸிலாந்து வீரர்கள் தற்சமயம் மாலைதீவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இந் நிலையில் அவர்கள் இந்த வார இறுதியில் இங்கிலாந்து நோக்கி சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நியூசிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஜூன் 2 ஆம் திகதி லார்ட்ஸில் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து ஜூன் 18 முதல் சவுத்தாம்படனில் ஆரம்பமாகும் இந்தியாவுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும்.
இங்கிலாந்து சென்றவுடன் வீரர்கள் ஏதேனும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு முகங்கொடுக்க நேரிடுவார்களான என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஸ்டீட் கூறினார்.
கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னர், கைல் ஜேமீசன் மற்றும் பிசியோ டாமி சிம்செக் ஆகியோரை உள்ளடக்கிய நியூஸிலாந்து வீர்கள் குழாம் மாலைதீவில் ஆரம்பத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தலில் இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்சமயம் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவில் கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இல்லை என்றாலும், கிரிக்கெட்டிலிருந்து வீரர்களில் ஒரு இடைவெளி அவர்களின் மனதையும் புதுப்பிக்கக்கூடும் என்று ஸ்டீட் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM